பாதியில் நின்ற ரோலர் கோஸ்டர் …45 நிமிடங்கள் அந்தரத்தில் தொங்கிய பயணிகள்…

246
Advertisement

அமெரிக்காவில் வடகரோலினா மாகாணத்தில் கேரோவின்ட்ஸ் தீம் பார்க் உள்ளது.அங்குள்ள ரோலர் கோஸ்டர் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென்று பயணிகளுடன் உச்சியிலேயே நின்றுவிட்டது.

மரணப்பயணத்துடன் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக பயணிகள் தொங்கியபடி இருந்தனர்.கடைசியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் பிரச்னையை சரிசெய்து அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இதில் சிக்கிய பயணிகள் இனி ரோலர் கோஸ்டரில் செல்லும் போது இச்சம்பவம் ஞாபகமாக வந்துபோகும் என்கின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.