“பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் கொரோனா தொற்று குறித்து அச்சப்பட தேவையில்லை”

248
Advertisement

நீண்ட நாட்களாக பள்ளிகளுக்கு செல்லாமல் மன அழுத்ததில் இருந்த மாணவர்களுக்கு, கொரோனாவை காரணமாக காட்டி பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பூரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் கொரோனா தொற்று குறித்து அச்சப்பட தேவையில்லை என தெரிவித்தார்.