“நீட் தேர்வு விலக்கு குறித்து நடப்புத்தொடரிலேயே சட்ட முன்வடிவு” – முதல்வர் ஸ்டாலின் அதிரடி

368
Advertisement

நீட் தேர்வை ரத்துசெய்வதற்கான சடமன்றமுன்வடிவு இந்த கூட்டத்தொடரிலேயே கொண்டுவரப்படும் என்று உதயநிதி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்  பதில் அளித்தார்.

சட்டப்பேரவையில் இன்று சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பட்ஜெட் மீதான விவாதத்தில் உரையாற்றினார்.

இந்த விவாத்தின்போது, நீட் தேர்வை ரத்து செய்யும் விவகாரத்தை ஓர் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட்தேர்வை ரத்து செய்வதற்கு கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், நீட் தேர்வின் தாக்கம் குறித்து நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.