தொடர் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் உத்தரபிரதேசம்..

263
Advertisement

உத்திரபிரதேசத்தில் கனமழையில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் பூர்வாஞ்சல், ரேபரேலி, கோரக்பூர், லக்னோ, பரபங்கி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கனமழை எதிரொளியால், வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தின் சில இடங்கலில் ரயில் தண்டவாளங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் பரபங்கி மாவட்டத்தில் கனமழை எதிரொளியால் வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.