துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

223
Advertisement

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நாளை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு குலாப் என பெயரிடப்பட்டுள்ளது.


வங்கக்கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது.

இந்த தாழ்வு மண்டலம் இன்னும் 12மணிநேரத்தில் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் நாளை மாலை தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவில் உள்ள கலிங்கப்பட்டினத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு “குலாப்” என பெயரிடப்படுகிறது.

இந்த குலாப் பெயரை பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால் தமிழகத்தில் உள்ள முக்கிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, காரைக்கால், புதுச்சேரி, தூத்துக்குடி, பாம்பன் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது