தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி!

112
Advertisement

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றார். உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி சஞ்சீப் பானர்ஜி புதிய ஆளுநருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று புதிய ஆளுநர் பதவியேற்புவிழா எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, வைகோ, ஜி.கே.வாசன், அண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்களும் விழாவில் பங்கேற்றனர்.

புதிய ஆளுநரை விழா மேடைக்கு தலைமைநீதிபதி சஞ்சீப் பானர்ஜியும் முதலமைச்சரும் அழைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து புதிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து புதிதாக பதவியேற்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

பின்னர் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தியும், புத்தகங்களை பரிசாக வழங்கியும் வரவேற்றனர்.

அமைச்சர்கள், தலைவர்கள் வாழ்த்து