தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு

306
Advertisement

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முன் கூட்டியே முடிகிறது. செப்டம்பர் 13ம் தேதியுடன் நிறைவு பெறுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, வரும் செப்டம்பர் 13-ஆம் தேதியுடன் முடித்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.