சென்னையில் 9 இடங்களில் கடைகள் திறக்க தடை

399
Advertisement

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2 ஆம் அலை கடந்த வாரம் வரை  குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு சில மாவட்டங்களில் கணிசமான உயர்ந்து கொண்டே வருகிறது. 

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் இன்று முதல் 9ஆம் தேதி வரை வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.

அதன்படி. சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு, திருவல்லிக்கேணி ஜாம் பஜார், தங்கசாலை, ராயபுரம் மார்க்கெட், அமைந்தகரை மார்க்கெட் உள்ளிட்ட 9 இடங்களில் வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் இன்று காலை 6 மணி முதல் 9 ஆம் தேதி காலை 6 மணி வரை செயலபட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

காலையில் கடைகளை திறக்க வந்த உரிமையாளர்களை கடைகளைத் திறக்கக் கூடாது என்று காவல்துறையினர் தொடர்ந்து எச்சரிக்கைவிடுத்து வருகின்றனர். இதற்கிடையே, கடைகளை முழுமையாக மூடாமல் நேரக் கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.