சென்னையில் தயாராகும் ஐபோன் 13 ஸ்மார்ட்போன்

242
Advertisement

ஐபோன் என்று சொன்னாலே அதுக்கு ஒரு தனி கெத்து இருக்கிறது, அதுவும் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் கிட்டத்தட்ட 20 வருடங்களாக வாடிக்கையாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றியிருக்கிறது, எனவே  ‘ஐபோன் 13’ ஸ்மார்ட்போனை புதுடில்லி இருக்கும் ஆப்பிள் நிறுவனம் சென்னையில் தயாரிக்க உள்ளது.

எனவே இது சம்மந்தமாக ஐபோன் 13 ஸ்மார்ட்போனின் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது இது குறித்து, மிகத் தெளிவாகவும் சிறப்பாகவும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்காக மேம்படுத்தப்பட்ட கேமரா மற்றும் அபார செயல்திறன் கொண்ட ‘ஏ 15 பயோனிக் சிப்’ ஆகியவற்றைக் கொண்ட ஐபோன் 13 ஸ்மார்ட்போனை தயாரிக்க ‘பாக்ஸ்கான்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது ஆப்பிள்.

இந்த நிறுவனம் சென்னைக்கு அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11, ஐபோன் 12 ‘பாக்ஸ்கான்’ நிறுவனத்தில் தயாரித்துள்ளது, எனவே மீண்டும் ஐபோன் 13 ஸ்மார்ட்போனை தயாரிக்கயுள்ளது ஆப்பிள் நிறுவனம், இந்த உள்நாட்டு உற்பத்தி மூலம் சுங்க வரி தவிர்க்கப்படுவதால் ஐபோன் 13 சீரிஸின் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது, இந்தியாவில் ஏற்கனவே ஆன்லைன் ஸ்டோரை துவங்கிய ஆப்பிள் நிறுவனம் விரைவில் ஆப்பிள் ஸ்டோர்களையும் ஏற்படுத்த வாய்ப்பு அதிகம் உள்ளது.