சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் இடையே வாக்குவாதம்

375
Advertisement

சட்டப்பேரவையில் ஒன்றிய அரசு விவகாரத்தில் ரோஸ் இஸ் எ ரோஸ் என்று வானதி சீனிவாசன் தெரிவித்ததற்கு, ரோஜா மல்லிகை ஆகாது என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார்.

சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய கோவை தெற்குதொகுதி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மத்தியஅரசை தற்போது ஒன்றிய அரசு என அழைப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் ரோஸ் இஸ் எ ரோஸ் என்றும் ஒன்றிய அரசு என்று கூறுவதால் மத்தியஅரசின் அதிகாரங்களை கூட்டவோ குறைக்கவோ முடியாது என்று கூறினார்.

இதற்கு பதிலளித்துப்பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ரோஸ் இஸ் எ ரோஸ்தான் ரோஜா மல்லிகை ஆகமுடியாது என்று கூறினார்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மாறாத கொள்கையுடன் பயணிப்போம் என்றும் அமைச்சர் வானதிக்கு பதில் அளி்த்தார்.