கொடநாடு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற வெளிநடப்பு

Advertisement

சட்டப்பேரவையில் இன்று கொடநாடு விவகாரம் குறித்து முதல்வர் மு.க,ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து, பாஜக, பாமக, உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.பேரவைக்கு வெளியே தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவையில் இன்று கொடநாடு விவகாரம் தொடர்பாக முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போது அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதைக்கண்டித்து பாஜக, பாமக, சட்டமன்ற உறுப்பினர்களும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், திமுக அரசைக்கண்டித்து பதாகைகளை ஏந்தியவாறு அதிமுக எம்.எல்.ஏக்கள் பேரவைக்கு வெளியை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

பொய்வழக்கு போட முயற்சிப்பதாக தமிழக அரசைக்கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் முழக்கங்களை எழுப்பினர்.