“கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை” – முதலமைச்சர் ஸ்டாலின்

384
Advertisement

கொடநாடு சம்பவம் தொடர்பாக, நீதிமன்ற அனுமதியுடன் முறைப்படி விசாரணை நடந்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை என்றும் அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

பழிவாங்கும் நடவடிகையில் திமுக அரசு ஈடுபடவில்லை என்றும் கொடநாடு வழக்கில் நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் விசாரணை நடந்து வருவதாகவும், மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படியே கொடநாடு வழக்கு குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.