கூகுளுக்கு இன்று 23வது பிறந்த நாள்: சிறப்பு டூடுல் வெளியிடூ!

383
Advertisement

தனது 23-வது பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு கூகுள் டூடுலை கூகுள் நிறுவனம் வடிவமைத்து வெளியிட்டுள்ளது.


கூகுள் நிறுவனம் இணையத்தில் பல சாதனைகளை படைத்து தன்னிகரற்று ஜொலிக்கிறது.

தேடுபொறியில் தொடங்கி, மென்பொருட்கள், ஆன்லைன் விளம்பரம், வன்பொருட்கள் என இணையத்தின் அனைத்து துறைகளிலும் பரந்து விரிந்திருக்கிறது.

கலிபோர்னியாவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரு மாணவர்களும் 1998-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தை தொடங்கினர்.

கூகுள் தனது 23-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது.

கூகுளின் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக, கூகுளின் உருவாக்கம், கூகுள் செய்யும் வே‌லைகள், செயல்பாடுகளை கார்ட்டூன் மூலம் விளக்கும் விதத்தில் சிறப்பு கூகுள் டூடுலை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.