குற்றாலம் அருவியில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்

308
Advertisement

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி 2-வது பாலத்தை ஒட்டி, காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடிகிறது.

தடுப்பு கம்பிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், குவிந்துகிடக்கும் மரக்கட்டைகளை அகற்றும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.