காவலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய டிஜிபி

341
Advertisement

தமிழ்நாட்டில் காவலர்களுக்கு கட்டாயம் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை அறிவிப்பால் காவல்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக்கொள்ள ஏதுவாகவும், காவலர்கள் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும்.

வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். காவலர்களின் பிறந்தநாள், திருமண நாளன்று குடும்பத்துடன் நேரம் செலவிடும் வகையில் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக காவல் துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துச் செய்தி, மாவட்ட மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வார விடுமுறை தேவைப்படவில்லை எனத் தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த அறிவுரைகளை அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தவறாமல் செயல்படுத்துமாறு டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.