ஒரு கிலோ மல்லி 2,000 ரூபாயா…?

223
Advertisement

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ, மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தற்போது கிலோ 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

பண்டிகை காலம் என்றாலே பூக்களின் விலை அதிகரிக்கும். ஆனால், தற்போது மழை அதிகமாக பெய்து வருவதால், பூக்களின் வரத்து குறைந்துள்ளது.

இதனால், விலை அதிகளவில் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக 5 டன் மல்லிகை பூ சந்தைக்கு வரும் நிலையில், தற்போது 1 டன் மல்லிகை பூ மட்டுமே வந்துள்ளதாக பூக்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.