இனி ஆன்லைன் தேர்வு கிடையாது… – அண்ணா பல்கலை., அறிவிப்பு

252
Advertisement

செமஸ்டர் தேர்வுகளை நேரடி எழுத்து தேர்வாக நடத்துவது குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பொறியியல் உள்பட அனைத்து கல்லூரிகளிலும் கடந்த ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டன.

இந்நிலையில், நோய்த்தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததை தொடர்ந்து அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், செமஸ்டர் தேர்வுகளை நேரடி எழுத்து தேர்வாக நடத்துவது குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, முதுநிலை மற்றும் முழுநேர பி.இ., பி.டெக். என்ஜினீயரிங் படிப்புகளுக்கான தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பி.ஆர்க். படிப்பு மாணவர்களுக்கான கல்வி சுற்றுலாவுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது