“அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிச்சாச்சு”

76
Advertisement

தீபாவளி திருநாளை ஒட்டி தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 விழுக்காடு வரை போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015 ன் படி போனஸ் பெற தகுதியான சம்பள உயர்வு 21 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அதன்படி போனஸ், கருணைத் தொகை வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 கருணைத் தொகை வழங்கப்படும்  என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் போனஸ் பெற தகுதியுள்ள ஊழியர்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகை 8,400 ரூபாய் பெறுவார்கள் என்றும் 2 லட்சத்து 87 ஆயிரத்து 250 பேர் ஊழியர்களுக்கு 216 கோடியே 38 லட்சம் ரூபாய்  போனஸ் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.