ஆண், பெண் உள்பட அனைவரும் பிறந்த மேனியுடன் மட்டுமே செல்லக்கூடிய பூங்கா இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில்தான் இந்த விநோதப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
போயிஸ் டி வின்சென்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பூங்கா 7 ஆயிரத்து 300 சதுர மீட்டர் பரப்பளவு உள்ளது. இந்தப் பூங்காவுக்குள் ஆண், பெண் என அனைவரும் ஆடை அணியமாட்டார்களாம். நிர்வாணமாகத்தான் பூங்காவுக்குள் சுற்றித் திரிவார்களாம். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இங்கே சூரியக் குளியலும் எடுப்பார்களாம்,,,
கேட்கும்போதே ஒருமாதிரியாக இருக்கிறதல்லா…….
யார் வேண்டுமானாலும் இங்கு போகலாம்
ஆனால்….
ஒரு நிபந்தனை….
கண்டிப்பாக எந்தவொரு ஆடையும் அணிந்திருக்கக்கூடாது. அப்படியென்றால், தப்புத்தண்டா பண்ண நினைச்சா……தூக்கி வீசிடுவாங்க…..வீசி…..அவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்காம்….
பாரிஸ் நகரில் வாரத்துக்கு 3 முறை நிர்வாணமாக நீந்தக்கூடிய நீச்சல்குளம் உள்ள நிலையில், தற்போது நிர்வாணப் பூங்கா சோதனை முயற்சியாகத் திறக்கப்பட்டுள்ளது. நிர்வாண உணவகமும் அங்கு உள்ளதாம்.
பிரான்ஸ் நாட்டில் ஏற்கெனவே 73 கடற்கரைகள் உள்பட 460 பகுதிகள் நிர்வாணப் பிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் சுமார் 26 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நிர்வாணப் பழக்கத்தைத் தங்கள் வாழ்வின் ஒரு வழக்கமாக மாற்றியுள்ளனராம்.
சில ஆண்டுகளுக்குமுன் இந்தப் பூங்கா திறக்கப்பட்டாலும், தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.
திறந்த மனசு உள்ளவங்க பா…
Relax please……