அன்பிற்கு இல்லை எல்லை… கணவனின் சாம்பலை சாப்பிடும் இளம் மனைவி!

243
wife eating her husband's ashes
Advertisement

இளம்பெண் ஒருவர் இறந்துபோன கணவனின் சாம்பலை தினமும் சாப்பிடும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் கேசி (casie) மற்றும் சீன் (sean).இவர்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு சீன் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். கணவரின் இழப்பை தாங்க முடியாத கேசி கடுமையான தவிப்பிற்கு உள்ளானார். அதனால் கணவனின் உடலை எரித்த சாம்பலை கரைக்காமல் அதை சாப்பிட ஆரம்பித்தார்.

அதன்பிறகு எங்குச் சென்றாலும் தன் கணவனின் சாம்பல் பெட்டியையும் தன்னுடன் எடுத்துச் செல்ல தொடங்கினார். மளிகைக்கடை, திரையரங்கு, அடுக்குமாடி அங்காடி என எல்லா இடங்களுக்கும் கணவனின் சாம்பலையும் எடுத்துச் சென்றார்.

தற்போது ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு முறை வரை கணவனின் சாம்பலை கேசி ருசிக்கிறார். அதை சாப்பிடும்போது கணவனையே சாப்பிடுவதாக உணர்கிறார். கேசியின் இந்த செயலைப் பார்த்து மற்றவர்கள் கிண்டல் செய்து சிரித்தாலும் அவர் அதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து சாம்பலை சாப்பிட்டு வருகிறார்.

தன்னுடைய விரலை முதலில் எச்சில்படுத்தி விட்டு, பின்பு சாம்பலில் அழுத்துகிறார். அதனைத் தொடர்ந்து விரலில் ஓட்டும் சாம்பலை நக்கி சாப்பிடுகிறார்.

கடந்த 2011 முதல் சாம்பலை சாப்பிட்டு வரும் கேசியால் அந்த பழக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை. கணவனின் சாம்பலை கணவனாகவே கருதுகிறார். ஒவ்வொரு முறையும் சாம்பல் பெட்டியை திறக்கும்போது எல்லையில்லா ஆனந்தம் அடைகிறார்.

அழுகிய முட்டை மற்றும் மணலின் சுவையை அந்த சாம்பல் கொண்டிருந்தாலும் அதை சாப்பிடும்போது அவர் மகிழ்ச்சியாக உணர்கிறார். 26 வயதாகும் கேசி தன்னுடைய கணவனின் அன்பிலிருந்தும் நினைவுகளிலிருந்தும் மீளாமல் அவரின் சாம்பலுடன் வாழ்ந்து வருகிறார்.

கணவன் மீது எல்லையில்லாத அன்பு வைத்திருக்கும் கேசி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறார்.