குழந்தைகளுக்கு என்னென்ன தடுப்பூசிகள் செலுத்த வேண்டும்?

247
Advertisement

குழந்தை பிறந்தவுடன்……

 1. காசநோய் (பி,சி,ஜி), போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி முதல்டோஸ் செலுத்த வேண்டும்.
 2. ஒன்றரை மாதத்தில்… டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டும்.
 3. மூன்றரை மாதத்தில்……டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து செலுத்த வேண்டும்.
 4. நான்கரை மாதத்தில்…போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.
 5. ஐந்தரை மாதத்தில்…போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ் செலுத்த வேண்டும்.
 6. ஒன்பதாவது மாதத்தில்…தட்டம்மை தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து செலுத்த வேண்டும்.
 7. ஒன்றே கால் வயதில் தட்டம்மை, ஜெர்மன் தட்டம்மை, புட்டாளம்மை தடுப்பூசி செலுத்த வேண்டும்.
 8. ஒன்றரை வயதில் டிபிடி(தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) செலுத்த வேண்டும்..
 9. நான்கரை வயதில்…டிபிடி(தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து செலுத்த
  வேண்டும்.
  இவையனைத்தையும் பெற்றோர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.