மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

207
Advertisement

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையேயான 2வது டி20 போட்டி வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய மெக்காய் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய, மேற்கிந்திய தீவுகள் அணி, 4 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் 3வது டி20 போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.

Advertisement