பெட்ரோல்போல் எரியும் தண்ணீர்

191
Advertisement

பெட்ரோல்போல் எரியும் தண்ணீரின் வீடியோ
இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஷ்யா- உக்ரைன் போரால் உலகளவில் பெட்ரோலுக்குத்
தட்டுப்பாடு ஏற்படலாம், பெட்ரோலின் விலையும் உயரலாம்
என்னும் நிலை ஏற்பட்டுள்ள சூழலில், தண்ணீரே பெட்ரோல்
போல் எரிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பரபரப்பான இந்தச் சம்பவம் கேரளாவில் சில மாதங்களுக்கு
முன்பு நிகழ்ந்துள்ளது.

அங்குள்ள பாலக்காடு அருகே திருத்தாலா பகுதியில் கூற்றநாடு
என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தின் பெரும்பாலான
வீடுகளில் கிணறுகள் உள்ளன. அந்தக் கிணற்று நீரைத்தான்
குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில் அந்தப் பகுதி முழுவதும் திடீரென்று பெட்ரோல்
வாசம் வரத்தொடங்கியது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி
மக்கள் தங்கள் கிணற்று நீரை வாளியில் எடுத்து அதில் தீயைக்
கொளுத்திப் போட்டனர்.

அப்போது கிணற்றுநீர் மளமௌவென்று எரியத் தொடங்கியது.
அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் தங்கள் கிராமத்திலுள்ள
அனைத்துக் கிணற்று நீரையும் எடுத்து சோதித்துப் பார்த்தனர்.

அதில் 10க்கும் மேற்பட்ட கிணற்று நீர் தீப்பிடித்து எரிந்ததைக்கண்டு
அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகள் நேரில் வந்து தண்ணீரைப் பரிசோதித்தபோது தண்ணீரில்
ஏதோவொரு எரிபொருள் இருப்பதை மட்டுமே உணர்ந்தனர். ஆனால்,
எதன் காரணமாகத் தீப்பற்றுகிறது என்பதைக் கண்டறியவில்லை.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகின்றனர்.
மர்மமாகவே இருக்கிறது