12 கி.மீ தொலைவுக்குப் பாய்ந்த எரிமலைக் குழம்பு

278
Advertisement

12 கிலோ மீட்டர் தொலைவுக்கு விண்ணில் பாய்ந்த எரிமலைக் குழம்பு பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இத்தாலி நாட்டிலுள்ள கிழக்கு சிசிலித் தீவில் அமைந்துள்ளது எட்னா மலை. எட்னா எரிமலையை உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
4 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் முதன்முறையாகப் பொங்கிய எட்னா எரிமலை, இதுவரை 90 முறை பொங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று மீண்டும் பொங்கியுள்ளது.

அப்போது எட்னா வெடித்து வெளியேறிய புகையும் சாம்பலும் விண்ணில் 12 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பரவி தீப்பிழம்பாகக் காட்சியளித்தது. இதனால் அருகிலுள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு,. விமானப் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.

மலை ஏறும் பயிற்சி மேற்கொள்பவர்கள், பனிச்சறுக்கு வீரர்கள், சுற்றுலாப் பயணிகள் என ஏராளமானோர் இங்கு அடிக்கடி வருகை தருவதுண்டு. அவர்கள் யாரேனும் இந்த எரிமலை பொங்கியதால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என இதுவரைத் தகவல் இல்லை.
என்றாலும், 1669 ஆம் ஆண்டு எட்னா பொங்கியபோது 20 ஆயிரம்பேர் இறந்தனர்.

எரினா எரிமலையின் மண் வேளாண்மைக்கு ஏற்றதாக உள்ளது. மலையின் அடிவாரத்தில் திராட்சைத் தோட்டங்களும், பிற பயிர்களும் பயிரிட்டுள்ளனர்.

இதனால், எட்னா எரிமலையைப் பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.