மாஸ்கோ, ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் நிலைமை மோசமாகும் என்றும், ரஷியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாகவே சர்வதேச அளவில் உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாகவும் புதின் தெரிவித்தார்.