வாலிபரின் குறும்புச் செயலால் நெகிழ்ந்த மணமக்கள்

375
viral
Advertisement

சமீபத்தில் நடைபெற்ற திருமணத்தின்போது வாலிபர் ஒருவர் செய்த வேடிக்கையான செயல் மணமக்களை மட்டுமன்றி, நெட்டிசன்களையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.

இந்தியத் திருமணத்தின்போது நடைபெறும் வேடிக்கையான செயல்களுக்கு பஞ்சமிருக்காது.

அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அலைஅலையாய்ப் பரவி வருகிறது.

திருமணம் நடந்ததும் மணமக்களிடையே எந்தளவுக்கு ஒற்றுமை, அன்யோன்யம் உள்ளது என்பதை உறவினர்களும் நண்பர்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறுவிதப் பழக்க வழக்கங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

அதனடிப்படையில், இங்கு காணும் வீடியோவும் அமைந்துள்ளது.

மணமக்கள் இருவரும் ஒன்றன்பின் ஒன்றாக நின்றுகொள்ள, உறவினரான இளைஞர் ஒருவர் மணமக்கள் இருவரையும் உயரே தூக்கி கீழே விழும்படி போட்டுவிடுகிறார்.

அப்படிச் செய்யும்போது தன் மனைவியைத் தரையில் விழுந்து காயம் ஏற்படாதபடி மணமகன் மெத்தைபோலக் கிடந்து காப்பாற்றி விடுகிறார்.

வேடிக்கையான இந்த நிகழ்வைப் பார்த்து சுற்றிலுமுள்ள உறவினர்கள் தைதட்டி சிரித்து ரசித்து மகிழ்கின்றனர்.

அதேசமயம், கணவன் தன்னைக் காப்பாற்றிவிட்ட பூரிப்பில் வெட்கம் கலந்த புன்னகையை வெளிப்படுத்துகிறார் புது மனைவி.