BLUE TEA நீங்கள் குடித்தது உண்டா?

339
Advertisement

பிளாக் டீ, லெமன் டீ வரிசையில் புளு டீயும் பிரபலமாகி வருகிறது.

காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை தேநீர்
அருந்துவது தவிர்க்க முடியாத உலக வழக்கமாகிவிட்டது.
அண்மைக்காலமாக மூலிகைத் தேநீர், மூலிகைக் காபி
போன்றவையும் பிரபலமாகி வருகிறது.

இந்த வரிசையில், புளு டீ என்னும் பெயரில் புதுவகை டீ
முக்கியத்துவம் பெற்று வருகிறது. சிங்கப்பூர், மலேசியா
நாடுகளில் செய்யப்படும் கேக்குகளில் இந்த நீலநிறப்
பட்டாணிப் பூ சேர்க்கப்படுகிறது.

நீலநிற வண்ணத்துப் பூச்சிப் பட்டாணிப் பூக்களிலிருந்து
இந்த டீ பேக் தயாரிக்கப்படுகிறது. மூலிகை டீயான இதில்
காஃபைன் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருள்
இல்லை.

கிளிட்டோரியா டெர்னெட்டா என்னும் தேயிலைச் செடியின்
இலைகளை நன்கு காயவைத்து டீ பேக் தயாரிக்கப்படுகிறது.
இதனை வெந்நீர் அல்லது குளிர்ந்த நீரில் சிறிதுநேரம் போட்டு
வைத்திருந்தால் ப்ளூ டீ தயார். இதனுடன் தேன் கலந்து பருகலாம்.
தேன் கலக்காமலும் பருகலாம்.

இந்த டீயின் நிறம் மற்றும் சத்துகள் காரணமாக சமூக வலைத்தளங்களில்
வைரலாகி வருகிறது ப்ளூ டீ…