விழுப்புரம்: 6 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

283

விழுப்புரம் அருகே, 6 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த உப்புவேலுரை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், அதே பகுதியில் வசிக்கும் பெண்ணிடம் தவறான உறவு வைத்திருந்தாக கூறப்படுகிறது. மேலும், அப்பெண்ணின் 6 வயது மகளுக்கு அடிக்கடி ஐஸ்கீரிம் வாங்கி கொடுத்து, பிரேம்குமார் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, சிறுமியின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரேம்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.