கிராமமும்… நகரமும்…

343
Advertisement

வெற்றிலைப் பாக்குப் போட்டால் கிராமத்தான்
பீடா போட்டால் நகரத்தான்

பச்சைக் குத்தினால் கிராமத்தான்
டாட்டூ போட்டுக்கொண்டால் நகரத்தான்

மருதாணி வைத்துக்கொண்டால் கிராமத்தான்
மெஹந்தி இட்டுக்கொண்டால் நகரத்தான்

மஞ்சள் தண்ணீர் ஊற்றினால் கிராமத்தான்
கெமிக்கல் பொடி தூவினால் நகரத்தான்

90 களில் மஞ்சள் சட்டை போட்டால் கிராமத்தான்
2015ல் மஞ்சள் சட்டை போட்டிருந்தால் நகரத்தான்

மஞ்சள் பை வைத்திருந்தால் கிராமத்தான்
மண்ணை மலடாக்கும் பாலிதீன் பை வைத்திருந்தால் நகரத்தான்

தன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமத்தான்
மனைவி அவள் நண்பர்களை அறிமுகம் செய்தால் நகரத்தான்

கிழிந்த ஆடை அணிந்தால் கிராமத்தான்
நல்ல ஆடையைக் கிழித்து அணிந்தால் நகரத்தான்

உதவிக்கு சைக்கிள் வைத்திருந்தால் கிராமத்தான்
தொப்பையைக் குறைக்க சைக்கிள் வைத்திருந்தால் நகரத்தான்

கோடு போட்ட அண்டர்வேர் அணிந்திருந்தால் கிராமத்தான்
ஜட்டி, பேன்டி தெரிய பேன்ட் அணிந்திருந்தால் நகரத்தான்

எது நாகரிகம்…எது ஆரோக்கியம்…?

நகரத்தானா கிராமத்தானா
சிந்திப்போம் சிறப்பாக செயல்படுவோம்.