விக்ரம் உடல்நிலை குறித்து மேலாளர் விளக்கம்

281
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம் திடீரென உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டதாக செய்தி பரவியது.

இந்நிலையில், விக்ரமின் மேலாளர் சூர்ய நாராயணன் அவரின் உடல்நிலை குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

அதில், விக்ரம் லேசான நெஞ்சு வலி காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மாரடைப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது போன்ற வதந்திகள் வேதனை அடைய செய்வதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த நேரத்தில் விக்ரம் குடும்பத்தாரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆதாரமற்ற செய்திகளை பகிர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.