Wednesday, December 11, 2024

பழைய கதை…வசீகரிக்கும் விஜய்! ஹிட் அடிக்குமா வாரிசு?

காலங்காலமாக தமிழ் சினிமாவில் எழுதி எழுதி தேய்த்த கதைக்களமான பணக்கார அப்பா, அவரை சுற்றி சுழலும் வர்த்தக சாம்ராஜ்யம், அதனால் வரும் பிரச்சினைகள் என படம் இருந்தால், அது எப்படி நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு வம்சி கொடுத்துள்ள ஒரே புதுமையான பதில் விஜய் மட்டுமே. கோடீஸ்வரரான தந்தையாக சரத்குமாரும் அவருக்கு மகன்களாக ஸ்ரீ காந்த், ஷியாம் மற்றும் விஜய் நடித்துள்ளனர்.

முதல் இரண்டு பிள்ளைகளும் அப்பாவின் பிசினஸ்ஸை கவனிக்க, விஜய் வெளிநாடு சென்று விடுகிறார். காலத்தின் கட்டாயத்தால் திரும்பி வரும் விஜய், அப்பாவின் பெயரை அழிக்க நினைக்கும் வில்லன், குடும்பத்தில் நிலவும் சிக்கல்கள் அனைத்தையும் சரி செய்து அசல் வாரிசாக அவதாரம் எடுக்கிறார்.

படத்தின் நேரம், போரடிக்க வைக்கும் அண்ணன் தம்பி பஞ்சாயத்து, விஜய்க்கு போட்டி போடும் அளவிற்கு வலுவான எதிர்மறை கதாபாத்திரங்களை அமைக்காதது படத்திற்கு சற்றே பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனினும், ‘சச்சின்’ ‘வசீகரா’ படத்தில் இருந்த துள்ளலான இளமையை வெளிப்படுத்தி வலம் வரும் விஜய் படம் முழுக்க தன்னுடைய வசீகரிக்கும் mannersithaal ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் என்றே சொல்லலாம்.

எமோஷன், காமெடி என படம் முழுவதும் ஒரு dozen நடிகர்கள் வந்து சென்றாலுமே, ட்ரைலரில் ஆட்டநாயகன் வசனத்திற்கேற்ப one man armyயாக படத்தை தாங்கி பிடித்திருக்கிறார் விஜய். தமனின் இசை தரும் energy,ரஞ்சிதமே பாடலில் விஜயின் single ஷாட் நடனம் என வாரிசு ஆங்காங்கே ரசிக்க வைக்கவும் தவறவில்லை. என்னதான் இருந்தாலும் சென்டிமென்ட், கூட்டுக்குடும்பம் என family audienceஐ கவர்ந்து வரும் வாரிசு மெகா ஹிட் அடித்தாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!