அடடே! இது தான் ‘தளபதி 67’ லுக்கா? வைரலாகும் க்ளிக்!

195
Advertisement

ஜனவரி 11ஆம் தேதி வெளியான ‘வாரிசு’ திரைப்படம் உலக அளவில் முதல் நாள் வசூலாக 30 கோடி வரை ஈட்டியுள்ளது.

படம் ரிலீஸ் ஆன பிறகு இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக் ஆகியோர் படத்தை திரையரங்குகளில் பார்த்தனர்.

அதன் பின், நடிகர் விஜயை சந்தித்த வம்சி மற்றும் தில் ராஜு சந்தித்து பூங்கொத்து வழங்கினர். இந்த புகைப்படத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனமான Sri Venkateswara Creations அதன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

விஜய் தற்போது அதிகமான தலைமுடி வைத்திருப்பதால், இது தளபதி 67 படத்தின் லுக்காக இருக்கலாம் என நெட்டிசன்கள் பதிவிட்டு வர, இந்த photo சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.