Tuesday, July 15, 2025

ப்ளூ சட்டையை வச்சு செய்த வம்சி! காட்டமாக தொடரும் ‘வாரிசு’ பஞ்சாயத்து

‘வாரிசு’ படம் வெளியானதில் இருந்தே ப்ளூ சட்டை மாறன் ஒருபக்கம் கவனம் ஈர்த்து வருகிறார். காரணம்,  படத்திற்கு positive review கொடுக்க அவர் ஒரு கோடி பெற்றதாக பேசப்பட்டு வந்தது.

எனினும், வழக்கத்திற்கும் அதிகமாக negative review கொடுத்து வாரிசு படத்தை ஹிந்தி மெகா சீரியல் போல இருப்பதாக வறுத்தெடுத்து வைத்தார் ப்ளூ சட்டை.

படம் எடுக்க இயக்குநர்களும் நடிகர்களும் கடுமையாக உழைப்பதாகவும், பல தியாகங்களை செய்வதாகவும் கூறிய வம்சி,சீரியல் போல இருக்கிறது என்ற கருத்து சீரியல்களையும் சேர்த்து இழிவுபடுத்துவதாகவே இருக்கிறது என்றார்.

மேலும், படங்களை போலவே சீரியலும் ஒரு creative job எனவும், தான் brilliant ஆன படம் எடுக்கவில்லை என்றும் entertain செய்யக்கூடிய commercial படம் மட்டுமே எடுத்திருப்பதாக நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, உண்மையை சொன்னா ஏன் கொந்தளிக்கிறார் மற்றும் dance rehearsal, dialogue practiceக்கு பேர்லாம் தியாகமா என ட்வீட் செய்துள்ளார் ப்ளூ சட்டை. மேலும், இதே கருத்துக்களை வலியுறுத்தும் மீம்ஸ்களை தேடிப்பிடித்து ட்வீட் போட்டு, ப்ளூ சட்டை ஒரு புறம், வம்சியை தொடர்ந்து ட்ரோல் செய்து வர, நெட்டிசன்கள் அவர் அப்படி சொல்வது இருக்கட்டும், நீங்களும் இப்படி negativity spread பண்ணியே தானே சம்பாதிச்சுட்டு இருக்கீங்க என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news