வலிமை திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து வெற்றிநடை போடுகிறது

293
Advertisement

இரண்டு ஆண்டுககள் கழித்து அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படம் கடந்த 24ஆம் தேதி வெளிவந்தது.இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.
முதல் நாளிலேயே தமிழகத்தில் சுமார் ரூ. 36 கோடி வசூல் செய்து நடிகர் விஜயின் சர்கார் படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது. மூன்று நாளில் சுமார் ரூ. 100 கோடி வசூல் செய்து இப்படம் சாதனை படைத்துள்ளது.
இதனை அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.வரக்கூடிய நாட்களில் குடும்பங்களாக ரசிகர்கள் வரும் பட்சத்தில் வசூல் இன்னும் எகிறும் என திரை வட்டாரங்கள் நம்புகின்றனர் .