தனது கவிதை மூலம் அதிபர் புதினுக்கு கவிஞர் வைரமுத்து டுவீட்

653
Advertisement

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்றோடு 14 நாளாகிறது . உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க தீவிரம் காட்டி வருகின்றன.இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயன்று வருகிறது . இதன் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் சண்டை தொடர்ந்து நடைபெற்றுகொண்டு தான் இருக்கிறது .

இந்நிலையில், உக்ரைன் மீதான போரை ரஷியா அதிபர் புதின் நிறுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுக்கோள் விடுவிக்கும் வகையில் கவிதை ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .அதில்

‘போரை நிறுத்துங்கள் புதின்

மில்லி மீட்டராய்
வளர்ந்த உலகம்
மீட்டர் மீட்டராய்ச் சரியும்

கரும்புகை
வான் விழுங்கும்

பகலை
இருள் குடிக்கும்

கடல்கள் தீப்பிடிக்கும்

குண்டு விழாத நாடுகளிலும்
ஏழைகளின்
மண்பானை உடையும்

ஆயுதம்
மனிதனின் நாகரிகம்;
போர் அநாகரிகம்

போரை நிறுத்துங்கள் புதின்’

என வேண்டுகோள் விடுத்துள்ளார் .