வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை “பைனாகுலர்” கொண்டு கண்காணிக்கும் வேட்பாளர் உ .பி.யில் ருசிகரம்

372
Advertisement

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை சட்டசபை தேர்தல்கள் 7 கட்டங்களாக நடைபெற்றன.இந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடத்தை “பைனாகுலர் ” கொண்டு வேட்பாளர் கண்காணிக்கும் சம்பவம் பலரையும் புருவம் உயர்த்த செய்துள்ளது .

உத்தரப் பிரதேசத்தில் மீரட் மாவட்டத்தில் உள்ள ஹஸ்தினாபுர் சட்டமன்ற தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பாக போட்டியிட்டவர் யோகேஷ் வர்மா. இவர் தனது தொகுதியில் பதிவான வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு இன்று தனது திறந்த ஜீப்பில் வந்தார்.

பின்னர் தான் வைத்திருந்த பைனாகுலரை கொண்டு ஜீப்பில் நின்றவாறு அந்த இடம் முழுவதும் சுற்றி கண்காணித்தார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.