ஒரு நாளைக்கு ரூ.1 லட்சத்திற்கும் மேல் சம்பளம்.. அப்படி என்ன வேலை தெரியுமா?

163
Advertisement

பொதுவாக ஒரு சாதாரண மனிதன் நாள் முழுவதும் உழைத்தால் அதிகபட்சம் சில ஆயிரங்கள் மட்டுமே சம்பாதிக்க முடிகிறது.

ஆனால் ஒரு பெண் ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?  அமெரிக்காவை சேர்ந்த (Gloria Richards) என்ற பெண் இந்திய மதிப்பில் தினமும் ரூ.1.6 லட்சம் சம்பாதிப்பதாக தனது சோஷியல் மீடியா மூலம் தெரிவித்துள்ளார். 34 வயதான குளோரியா ரிச்சர்ட்ஸ் ஒரே நாளில் இவ்வளவு பணம் சம்பாதிக்க அப்படி என்னதான் செய்கிறார் என்று தெரியுமா..!

நாளொன்றுக்கு சுமார் இரண்டாயிரம் டாலர் வரை வருமானம் ஈட்டும் குளோரியா ரிச்சர்ட்ஸ், உலகெங்கிலும் உள்ள சில பெரும் கோடீஸ்வரர்களின் குழந்தைகளை கவனித்து கொள்ளும் வேலையை செய்து வருகிறார். இந்த வேலையின் மூலன் தான் நாளொன்றுக்கு ஒன்றரை லட்சத்திற்கும் மேல் சம்பாதித்து வருகிறார். இந்த வேலைக்காக தனியார் ஜெட் விமானத்தில் உலகம் முழுவதும் சுற்றுவதாகவும் அவர் கூறுகிறார்.