அருவி அல்லது நீர்வீழ்ச்சி என்றால் அது மேலிருந்து பூமியை நோக்கிக்
கீழேதானே விழவேண்டும். ஆனால், புவியீர்ப்பு விசையை மீறி
மேல்நோக்கிப் பாயும் அதிசய அருவி பற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இயற்கையின் அதிசயங்களுள் ஒன்றான இந்த மேல்நோக்கிய அருவி
மகாராஷ்டிர மாநிலம், புனே அருகே ஜுன்னார் என்னும் இடத்தில்
நானேகாட் பகுதியில் உள்ளது. 2000 அடி உயரத்திற்குப் பாய்ந்து செல்கிறது
இந்த அதிசய அருவி.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த அதிசய
அருவி மலையேறுவோருக்கும் மலையேறும் பயிற்சியில் ஈடுபடுவோருக்கும்
இனிமையைத் தருகிறது.
மும்பையிலிருந்து 3 மணி நேரப் பயணத்தில் இந்த மலைப்பகுதியை
அடைந்துவிடலாம். இங்குள்ள மலைப்பகுதியில் ஏராளமான மேல்நோக்கிய
நீர்வீழ்ச்சிகள் இயற்கையாகவே அமைந்துள்ளன..
இந்தியாவைத் தவிர, சில வெளிநாடுகளிலும் இந்த மேல்நோக்கிய அருவிகள் உள்ளன.
புவியீர்ப்பு விசையை மீறி நிகழும் இந்தச் செயல் இயற்கையானதல்ல.
இந்தப் பகுதியிலுள்ள பள்ளத்தாக்கில் வீசும் பலத்த காற்றால் தண்ணீர்
மேல்நோக்கிச் செல்கிறது.
இயற்கையே தன் விதியை மீறியுள்ளதைப் பார்த்தீர்களா..? இதைப் பற்றி நீங்க
என்ன நினைக்கிறீங்க…?