தி கேரளா ஸ்டோரி படத்தை எதிர்ப்பவர்கள் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாளர்கள் என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்….

102
Advertisement

சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி படத்திற்கு மேற்குவங்கத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தடை விதித்துள்ளது.

மாநிலத்தில் வெறுப்புணர்வு மற்றும் வன்முறைக்கான சம்பவம் எதுவும் நடந்து விடாமல் தவிர்ப்பதற்காகவும், மாநில அமைதியை காக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் மம்தா பானர்ஜியை பா.ஜ.க-வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பா.ஜ.க-வினர் கொண்டாடி வருகின்றனர்.

Next இந்நிலையில், டெல்லியில் உள்ள திரையரங்கில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தி கேரளா ஸ்டோரி படத்தை எதிர்ப்பவர்கள் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாளர்கள் என்று தெரிவித்தார்.

ஸ்மிருதி, “மகாராஷ்டிரா அரசுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், படத்தின் தயாரிப்பாளர்களை அச்சுறுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பாதுகாப்பு பிரச்சினை மற்றும் சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”