உள்நாட்டு விமானங்களில் ஒரே நாளில் 4.56 லட்சம் பேர் பயணித்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதிய சிந்தியா தெரிவித்துள்ளார்…

94
Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

பயணிகள் உள்நாட்டு விமான போக்குவரத்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்றும் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி ஒரேநாளில் 2 ஆயிரத்து 978 விமானங்களில் 4 லட்சத்து 56 ஆயிரத்து 82 பேர் பயணம் செய்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சிவில் விமான போக்குவரத்து நாளுக்குநாள் சாதனையை படைத்து வருகிறது என கூறியுள்ள அவர், கொரோனா தொற்றுக்கு பின் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது விமான போக்குவரத்து துறையின் வளர்ச்சியை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.