18 ஆண்டுகளாக நைட்டியுடன் வலம்வந்த மேக்ஸி மாமா

346
Advertisement

கேரள மாநிலம், கொல்லம் அருகே உள்ள கடைக்கல்
பகுதியைச் சேர்ந்த கையேந்தி டிபன் கடை உரிமையாளர்
யகியா 18 ஆண்டுகளாக நைட்டியையே உடுத்தி பொது
இடங்களில் வலம்வந்த செயல் இணையத்தில் வைரலானது.

75 வயதான இவர் துபாயில் வேலை செய்துவந்தார்.
சொந்த ஊருக்குத் திரும்பியதும் கையேந்தி பவன்
தொடங்கி நடத்தி வந்தார்.

இவரது ஓட்டலின் சிறப்பே விலை மலிவு என்பதுதான்.
மதியச் சாப்பாடு விலை ரூ 10 தான் என்றால் பார்த்துக்
கொள்ளுங்களேன்..

10 புரோட்டா வாங்கினால் 5 தோசைகளும், 5 சிக்கன்
குழம்பு வாங்கினால் ஒரு சிக்கன் பிரையும் இலவசமாகத்
தருகிறார். எவ்வளவு சாப்பாடு வேண்டுமானாலும்
சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால், சாப்பாட்டை
மீதி வைத்தால் பைன் கட்டவேண்டும்.

சாப்பாடு மட்டுமல்ல, டீயும் இவரது கையேந்தி
பவனில் சீப் தான். ஒரு டீ 5 ரூபாய் மட்டுமே.

18 வருஷங்களுக்கு முன்பு ஒரு நாள் இந்தக் கையேந்தி
பவனுக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் டீ குடிக்க
வந்தார். அப்போது எகியா தான் உடுத்தியிருந்த வேட்டியை
மடித்துக் கட்டியிருந்தார்.

வேட்டியை மடித்துக் கட்டியிருப்பதைத் தன்னை அவமதிப்ப
தாகக் கருதினார் எஸ்ஐ. அதேசமயம், தன்னைக் கண்டதும்
எகியா மடித்துக் கட்டியிருந்த வேட்டியைக் கீழிறக்கி தனக்கு
மரியாதை செலுத்துவார் என்று சப் இன்ஸ்பெக்டர் எதிர்
பார்த்தார் போலும்.

ஆனால், எகியா அப்படிச் செய்யவில்லையாம். அதனால்
ஆத்திரம் அடைந்த எஸ்ஐ, எகியாவைக் கெட்ட வார்த்தை
களால் திட்டியதுடன் கடுமையாகத் தாக்கியும் உள்ளார்.

இதனால் வருத்தமடைந்த எகியா தான் உடுத்தியிருந்த
வேட்டி சட்டையை உடனே கழற்றி வீசியெறிந்தார்.
அன்றிலிருந்து பெண்கள் அணியும் இரவு நேர உடையான
நைட்டியைத் தனது முழுநேர உடையாக உடுத்தத் தொடங்கினார்.

கடந்த 19 ஆண்டுகளாக எங்கு சென்றாலும் நைட்டியுடனேயே
வலம்வந்தார்.

நைட்டி உடுத்தியிருப்பதால் மேக்ஸி என்றும், மாமன் என்பதன்
அடையாளமாக மாமா என்றும் பொருள்படும்படியாக மேக்ஸி
மாமா என்று கேரள மக்கள் இவரைக் கிண்டலாகவும் பாசத்தோடும்
அழைத்தனர்.