போருக்கு மத்தியில் இந்தியரைக்
கரம்பிடித்த உக்ரைன் பெண்

226
Advertisement

ரஷ்யப் படையெடுப்பால் உக்ரைன் உருக்குலைந்துகொண்டிருக்கும்
நிலையில், நிகழ்ந்த ஒரு திருமணம் அனைவரையும் மகிழ்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.

உக்ரைன் போர் தொடங்குவதற்கு முந்தைய நாள் இந்தியரை
மணந்துகொண்ட அந்தப் பெண் உலக நாடுகளின் கவனத்தை
ஈர்த்து வருகிறார்.

பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா அதிரடியாகப்
போரைத் திணித்தது. அதற்கு ஒரு நாள் முன்பாக, அதாவது,
பிப்ரவரி 23 ஆம் நாள் உக்ரைன் பெண் லியுபோவுக்கும் அங்கு
அவரோடு பணிபுரிந்துவரும் இந்தியரான பிரதீக்கிற்கும்
உக்ரைனில் திருமணம் நிகழ்ந்தது.

மறுநாளே வரவேற்பு நிகழ்ச்சிக்காக இந்தியாவுக்குப் புதுமணத்
தம்பதி வந்துவிட்டனர். பிரதிக்கின் சொந்த நகரான ஹைதரா
பாத்தில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த
விருந்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டு
புதுமணத் தம்பதியை வாழ்த்தினர்.

இந்தியா வந்ததும், உக்ரைன்மீது போரைத் தொடங்கியது ரஷ்யா.
இந்த நிலையில், புதுமணத் தம்பதியும் அவர்களின் உறவினர்களும்
போர் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் என்று பிரார்த்தனை
செய்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக மணமக்கள் இந்தியா வந்துவிட்டாலும், உக்ரைன்
நிலவரத்தைக்கண்டு மனம் வருந்துகின்றனர்.