உக்ரைன் மக்களின் தேசபக்தியை புதின் குறைத்து மதிப்பிட்டு விட்டார் – உக்ரைன் அதிபரின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்

471
Advertisement

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போருக்கு கண்டனம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில், ரஷ்யா இந்த படையெடுப்பை சிறப்பு நடவடிக்கை என்று குறிப்பிட்டாலும் உண்மையில் இது உக்ரைன் குடிமக்கள் மீதான படுகொலை என குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா பொதுமக்களுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை என்று கூறி வருகிறது என்றும், ஆனால் ரஷ்யா நடத்திய தாக்குதலில் குழந்தைகள் பலரும் உயிரிழந்துள்ளனர் எனவும் கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனையும் அதன் மக்களின் தேசபக்தியையும் குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்று கூறியுள்ள உக்ரைன் அதிபரின் மனைவி ஒலேனா, உக்ரைன் அமைதியை விரும்புகிறது என்றும் ஆனாலும் அதன் எல்லைகளையும் அதன் அடையாளத்தையும் பாதுகாக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உலகெங்கிலும் உள்ள மக்கள் உக்ரைனுக்கு தரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ள அவர், உக்ரைன் மீதான அன்பை நோக்கிய நமது ஒற்றுமையால் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.