ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் உக்கிரமான போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் பெண்ணை திருமணம் முடித்து, இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை.மணமகனின் பெயர் பிரதீப் மல்லிகார்ஜூன ராவ், மணமகளின் பெயர் லியுபோவ். இருவரும் உக்ரைனில் காதலித்து அங்கேயே திருமணமும் செய்துள்ளனர் . அங்கு இந்திய முறைப்படி தாலி கட்டி லியுபோவை மனைவியாக ஏற்றுக் கொண்டார் பிரதீக். திருமணம் முடிந்த நிலையில் அங்கு போர் வெடித்தது. இதைத் தொடர்ந்து இருவரும் இந்தியா வந்து சேர்ந்தனர். ஹைதராபாத்தில் இவர்களது திருமண வரவேற்பு விமர்சையாக நடந்தது .
போர்க்களத்தில் கரம்பிடித்த காதலர்கள் உக்ரைன் பெண்ணை மணந்த இந்தியர்
Advertisement