உக்ரைனில் இந்தியா மாணவர்களை போல் பாக்கிஸ்தான் மாணவர்களும் சிக்கி தவிக்கின்றனர் .ஆனால் அவர்களை மீட்க பாகிஸ்தான் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மாணவர்கள், இந்திய தேசியக் கொடியை கையில் பிடித்தவாறு உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
பாகிஸ்தான் தொலைக்காட்சியில் பேசிய நபர், இந்த உண்மையை வெளியே சொல்லியுள்ளார் . இந்திய தேசியக் கொடியை கையில் பிடித்து கொண்டால் உக்ரைனில் இருந்து எவ்வித தாக்குதலுக்கும் ஆளாகாமல் பாதுகாப்பாக வெளியேற முடியும் என்பதால் பாகிஸ்தான் மாணவர்கள் இந்திய தேசியக் கொடியை அசைத்து, பாரத மாதா கீ ஜே என்ற கோஷம் போடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .