உக்ரைன் போர் – கடந்த 3 மாதங்களில் ரஷ்ய வீரர்கள் 15 ஆயிரம் பேர் பலி

244

உக்ரைன் மீதான ரஷ்ய போர் 3 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கிறது.

உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் போரை எதிர்கொண்டு வருவதால் போரின் இலக்கை எட்ட முடியாமல் ரஷ்யா திணறி வருகிறது.

மேலும் இந்த போரில் உக்ரைனை விட ரஷ்யா பெரும் இழப்பை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உக்ரைன் மீதான படையெடுப்பின் முதல் 3 மாதங்களில் பலியான ரஷ்ய படை வீரர்களின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தானில் 9 ஆண்டுகள் நடந்த போரில் சோவியத் யூனியன் சந்தித்த உயிரிழப்புகளுக்கு சமம் என இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி உக்ரைன் பேரில் ரஷ்யா இதுவரை 15 ஆயிரம் வீரர்களை இழந்திருக்கலாம்  என்றும் இங்கிலாந்து கூறியுள்ளது.