ரஷ்ய பூனைகளுக்கு உக்ரைனில் தடை!

352
Advertisement

ரஷ்ய-உக்ரைன் போர் நிலவி வரும் சூழலில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல நாடுகள் ரஷ்யாவிக்கிற்கு பல கட்டுப்பாடுகளை விதித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில்,

தற்போது ரஷ்ய பூனைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ந்தேதி தொடங்கிய போர் ஏழு நாட்களை எட்டியது.

ஒவ்வொரு நாளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

உலக நாடுகள் தனிமைப்படுத்தினாலும், ரஷ்யா கண்டுகொள்ளாமல் தனது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

ரஷ்யாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பல இடங்களில் முடக்கம் செய்யப்பட்டுள்ளதையடுத்து

தற்போது ரஷ்ய பூனைகளை உக்ரைன் நாட்டில் இறக்குமதி செய்ய உக்ரைன் அரசு தடைவிதுள்ளது.

இதை பூனைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் உக்ரைனின் கண்காட்சிகளிலும் ரஷ்ய பூனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.