நிர்வாண போட்டோ அனுப்பி டாக்டரிடம் பண மோசடி செய்த பெண்கள் !

496
Advertisement

இரு பெண்கள், தங்களது நிர்வாண போட்டோவை ஒரு ஆண் டாக்டருக்கு அனுப்பி வைத்து,
அவரிடம் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில், கேரளா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது..

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒரு பக்கம் அதிகரித்த வண்ணம் இருந்தாலும்,

இன்னொரு பக்கம் ஆண்களை மோசடி செய்யும் பெண்களும் தற்போது களமிறங்கி வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் கசப்பான உண்மையாகவே இருக்கிறது. இதற்கு வலு சேர்க்கும் விதமாகவே,

கேரளாவில் இப்படியான ஒரு சம்பவம் அரங்கேறி அனைத்து தரப்பினரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

திருச்சூரைச் சேர்ந்த 32 வயதான டாக்டர் ஷா நவாஸ் என்பவர், அந்த பகுதியில் ஒரு க்ளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த சூழலில் தான், டாக்டர் ஷா நவாஸ்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ஒரு பெண் மெஸேஜ் அனுப்பி உள்ளார்.

இதனைப் பார்த்த அந்த டாக்டர் ஷா நவாஸ், “யாரோ பேஷண்ட் நமக்கு ஏதோ மெசேஜ் அனுப்பி உள்ளனர்” என்று, நினைத்து அவர்களுக்கு பதில் அனுப்பி வைத்து உள்ளார்.

அதன் பிறகு, தொடர்ந்து சாட்டிங் செய்த அந்த பெண், அவரின் நிர்வாண புகைப்படத்தை இந்த டாக்டருக்கு வாட்ஸ்ப்பில் அனுப்பி வைத்து உள்ளார்.

இந்த போட்டோவைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த டாக்டர் ஷா நவாஸ், அந்த போன் நம்பரில் தொடர்பு கொண்டு கேட்டபோது, எதிர் முனையில் யாரும் பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால், அடுத்த சில நிமிடத்தில் அந்த பெண்ணின் எண்ணிலிருந்து “3 லட்சம் ரூபாய் பணம் கேட்டு” மிரட்டல் வந்திருக்கிறது.

அதன் படி, “3 லட்சம் ரூபாய் பணம் தராவிட்டால், போலீசில் புகார் அளிக்கப்படும்” என்றும், அந்த மிரட்டலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து, பயந்து போன அந்த டாக்டர், இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக போலீசார் தந்த ஆலோசனையின் படி, “அந்த டாக்டர் அந்த பெண்ணை, ஒரு தனிமையான இடத்திற்கு வரச்சொல்லி, அங்கு அவர் கேட்ட பணத்தை கொடுப்பதாக கூறி அவர்களுக்கு மெசேஜ் அனுப்பி” வைத்திருக்கிறார்.

டாக்டரின் இந்த மெசேஜ் பார்த்து அந்த பெண், குறிப்பிட்ட ஒரு இடத்தில் பணம் பெற நேரில் வருகை தந்திருக்கிறார்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த போலீசார், பணம் பெற வந்த காயங்குளத்தைச் சேர்ந்த 29 வயதான நிஷா மற்றும்
அவரது தோழியான திருச்சூரைச் சேர்ந்த 33 வயதான நவுபியா ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதனையடுத்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, ஆண் டாக்டர் ஒருவருக்கு, வாட்ஸ் ஆப்பில் இரு பெண்கள் நிர்வாண புகைப்படம் அனுப்பி,
பணம் பறிக்க முயன்ற சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

து.