போலி கிளினிக் நடத்தி வந்த இரண்டு மருத்துவர்கள் கைது

392

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்ப நாயக்கன்பாளையத்தில், கடந்த 10 ஆண்டுகளாக கிளினிக் செயல்பட்டு வருகிறது. இந்த கிளினிக்கில் போலி மருத்துவர்கள் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் வந்துள்ளது.

இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில், பொதுமக்களுக்கு போலி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. இதையடுத்து போலி மருத்துவர்கள் ஏழுமலை உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் நள்ளிரவில் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.