சீனாவில் ஓராண்டிற்கு பிறகு கொரோனா தொற்றால் இருவர் உயிரிழப்பு

284
Advertisement

கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக, சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஓமைக்ரான் வகை கொரோனா உருமாற்றம் அடைந்து பரவி வருவதே இதற்கு காரணம். இந்த நிலையில், ஜிலின் மாகாணத்தில், கொரோனா தொற்று காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவில் கடந்த ஓராண்டிற்கு பிறகு முதன்முறையாக இரண்டு பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின், பதிவாகும் கொரோனா இறப்பு இது என சீனா அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நகரங்களில் கோடிக்கணக்கான மக்கள் வீடுகளுக்குள்ளேயே ஊரடங்கால் முடக்கப்பட்டுள்ளனர்.